பார்க்கிங் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளது என பேசிய இயக்குனர் லோகேஷ் தெரிவிக்க, அதே மேடையிலேயே நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பதிலளித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
மேலும, இந்த படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்தின் ரன்டைம் 2 மணி 8 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தவிர எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு ப்ரோமோஷன் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ‘பார்க்கிங்’ பட செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.
11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!
அதாவது, “மிகப்பெரிய வெற்றியைத் தரும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கு என ‘பார்க்கிங்’ படம் குறித்து பேசியதோடு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் வருவதுபோல், 2 கேரக்டர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டை தான் படத்தின் கதை. எம்.எஸ். பாஸ்கர் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை” என கூறிஉள்ளார்.
நெகட்டிவ் ரோலில் நடிக்க ரொம்ப நாளா ஆசை – சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்!
இதனை தொடர்ந்து பேசிய எம்.எஸ். பாஸ்கர், என் அண்ணன் கமலையே இயக்கிய உங்களோடு பயணிக்க நான் ஆசைப்படுகிறேன் என எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார். “எம்.எஸ்.பாஸ்கர் சாரோடு இணைந்து பணியாற்ற வேண்டுமென லோகேஷ் சொன்னதற்கு, என்னோடு பயணிக்க லோகேஷ் ஆசைப்படுவது என்பது பெரிய வார்த்தை. ஒரு வாய்ப்பு கொடுங்கள்! நான் உங்களுடன் பயணிக்கிறேன். என்னைவிட வயதில் நீங்கள் சிறியவர் என்றாலும், பெரும் புகழ்பெற்றவர் இன்னும் பெறப்போகிறவர்” என புகழாரம் சூட்டினார் முத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…