நான் மெட்ராஸில் வளர்ந்தவன் எனக்கு சாதியெல்லாம் தெரியாது! நடிகர் கார்த்தி பேச்சு!

karthi speech

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி மெட்ராஸ் படம் குறித்தும் ஜப்பான் படம் குறித்தும் பேசினார். மெட்ராஸ் படம் குறித்து அவர் பேசியதாவது ” பா .ரஞ்சித் இயக்கத்தில் நான் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்ததற்கு காரணம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், படம் ஒரே ஒரு பெரிய சுவரை வைத்து அரசியல் பேசப்பட்டு இருக்கும். கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால்தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன்.

முதலில் கைதி 2 அப்புறம் தான் ரோலக்ஸ்! ‘ஜப்பான்’ விழாவில் அப்டேட் விட்ட லோகேஷ் கனகராஜ்!

எனக்கு சாதியெல்லாம் தெரியாது அதற்கு காரணம் நான் மெட்ராஸில் வளர்ந்தேன். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்குச் சாதியெல்லாம் தெரியாது. அங்கு இருப்பவர்களில் யாரிடம் பழகினாலும் அவருடைய பெயரை மட்டும் தான் கேட்போம். அதனை தாண்டி சாதி பற்றி எல்லாம் பேசவே மாட்டோம்” என கூறினார்.

அதனை தொடர்ந்து ஜப்பான் படத்தை பற்றி கார்த்தி பேசுகையில் ” ஜப்பான் படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கும் மிகவும் பிடித்தது. இதற்கு முன்பு ராஜு முருகன் இயக்கிய கூக்கு படம் எனக்கு மிகவும் பிடித்தது. இதுவரை எந்த இயக்குனரையும் அழைத்து எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டது இல்லை முதல் முறையாக ராஜு முருகன் அழைத்து தான் கதை கேட்டேன்.

அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!

அவரும் எனக்கு சில கதைகளை சொன்னார். அதில் ஜப்பான் படத்தின் கதை கேட்கவே மிகவும் வித்தியாசமாக நன்றாக இருந்தது. இதன் காரணமாக தான் ஜப்பான் திரைப்படத்தில் நடித்தேன்” எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளர். மேலும் ஜப்பான் படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்