இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன் – நடிகை சாய் பல்லவி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் இர்பான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை சாய் பல்லவி.
நடிகர் இர்பான் கான் பிரபாலாமான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகராவார். இவர் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன். உங்கள் நடிப்பு மற்றும் சினிமா மீதான காதல் உங்களை எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவராக ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)