உங்கள் வாழ்க்கை துணையாக இருப்பதை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்..கனி கணவர் நெகிழ்ச்சி பதிவு.!

Default Image

தமிழ் சினிமாவில்  நான் சிகப்பு மனிதன், சமர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திரு. இவர் கார்த்திகா அகத்தியன் என்பவரை கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கார்த்திகா அகத்தியன் வேறு யாரும் இல்லை. குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமான காரக்குழம்பு கனி தான்.

Karthika Agathiyan
Karthika Agathiyan [Image Source : Twitter]

கனியின் உண்மையான பெயர் கார்த்திகா அகத்தியன் தான். இவரை இயக்குனர் திருவின் மனைவி என்பதை விட காரக்குழம்பு கனி  என்று தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருமையாக சமையல் செய்து சீசன் 3 வெற்றியாளரானார்.

Karthika Agathiyan thiru
Karthika Agathiyan thiru [Image Source : Twitter]

இந்நிலையில், திரு மற்றும் கனி தம்பதிக்கு திருமணம் முடிந்து இன்றுடன் 15-ஆண்டுகள் ஆகிறது. எனவே ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, இயக்குனர் திரு தனது ட்வீட்டர் பக்கத்தில் தன் மனைவி கனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு ” என்னிடம் நீங்கள் இருக்கும்போது மேலும் கேட்க முடியாது. உங்கள் வாழ்க்கையின் துணையாக இருப்பதை நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 15வது ஆண்டு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்