கட்டாயத்தின் பெயரில் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் கிடையாது : நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையும், பின்னணி பாடகியுமாவார். இவர் தமிழில் நூற்றென்பது என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை நித்யா மேனன், ‘லிவிங் டு கெதர், லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்’ போன்ற படங்களில் நடிப்பதால், கல்யாணத்தில் விருப்பம் கிடையாது என்று அர்த்தம் இல்லை. கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்காக யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் கிடையாது என்றும், இப்பொது அதுக்கான அவசியமும் வரவில்லை. நேரமும், சரியான நபரும் வரும் போது திருமணம் பற்றி யோசிப்பேன்.’ எனக் கூறியுள்ளார்.