நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்களும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, இவரது ரசிகர்கள் நேற்று பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், இரத்ததான முகாம் நடத்தியுள்ளனர்.
இந்த முகாமினை தனுஷின் பெற்றோர்களான கஸ்தூரி ராஜா மற்றும் தாணு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துள்ளனர். இந்த இரத்ததான முகாமில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி மாவட்ட தனுஷ் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், ‘ கண்ணா எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், உங்க அன்பு மட்டும் போதும். அன்பு மட்டும் கொடுங்க என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எந்த நடிகர்களை பற்றியும் நாம் பேச வேண்டாம். அப்படியே யாராவது என்னை குறித்து உங்களிடம் தவறாக பேசினால் நன்றி என்று கூறிவிட்டு கடந்து போங்கள். அன்பு மட்டுமே நிரந்தரம் என்றும், விரைவில் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…