நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை – சிவக்குமார் வாழ்த்து

Kamal Haasan SIVAKUMAR

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை (நவம்பர் 7 ஆம் தேதி) 69வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்றே தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், உலக நாயகன் கமலுக்கு நெருங்கிய நண்பரான நடிகர் சிவகுமார், தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தனது வலது குறிப்பில், “சிவாஜி, கமலை தவிர வெரைட்டி ரோல்களை யாராலும் செய்ய முடியாது. 8 படங்களில் சேர்ந்து நடித்தோம்.

வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான். நடிப்பில் இனி நீங்கள் சாதிக்க எதுவும் இல்லை. நீங்கள் திரையில் சாதித்ததை, அரசியலிலும் சாதிக்க முடியும். அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. துணிந்து இறங்குங்கள்” என தெரிவித்துள்ளார்.

கமல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெட்டப்பை சும்மா அதிருதே!! சம்பவம் செய்ய காத்திருக்கும் உலக நாயகன்…

சிவகுமார் – கமல்

1970-களில் கமல்ஹாசனும் சிவகுமாரும் இணைந்து குமாஸ்தாவின் மகள், சொல்லத்தான் நினைக்கிறேன், குறத்தி மகன், அன்னை வேளாங்கண்ணி, அப்புறம் சிந்துதே வானம், மேல்நாட்டு மருமகள் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தை ஓடவிட்ட ‘சர்தார்’! இந்த ஆண்டு தீபாவளி வெற்றியாளராவாரா கார்த்தி?

நடிகர் சிவகுமார்

தமிழ் சினிமாவில் முன்னோடியாக விளங்கும் பழம்பெரும் நடிகர் சிவக்குமார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்