சம்பளமே வேண்டாம் சும்மா நடிச்சு கொடுக்கிறேன்! புது படத்தால் நொந்து போன ஆர்.ஜே.பாலாஜி?
நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி கடைசியாக ரன்பேபிரன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஷிவானி ராஜசேகர், கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் உருவாகிறதா இல்லையா என்று தெரியாமலே இருந்த நிலையில், அமைதியாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாம். படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தை எல்லாம் எடிட் செய்யும் வேலைகள் தான் நடந்து வருகிறதாம். எனவே, படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு படத்தினுடைய பர்ஸ்ட் காப்பி ஆர்.ஜே பாலாஜிக்கு போட்டுக்காட்டப்பட்டுள்ளதாம்.
அதனைப் பார்த்த ஆர்.ஜே. பாலாஜி மிகவும் அதிர்ச்சியாகிவிட்டாராம் . அதேபோல படத்தின் தயாரிப்பாளரும் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டாராம். அந்த அளவிற்கு படம் மிகவும் கொடுமையாக இருக்கிறதாம். எனவே இந்த படத்தை ரிலீஸ் செய்தால் செட் ஆகாது என்று யோசனை செய்துவிட்டு ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இன்னொரு படம் வேண்டும் என்றாலும் நான் உங்களுக்கு நடித்து தருகிறேன். அதுவும் நீங்கள் இந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளம் கூட கொடுக்கவேண்டாம். ஆனால், படத்தை ரிலீஸ் மட்டும் செய்யாதீர்கள். என படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இடம் பேசி உள்ளாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழுஇருக்கிறதாம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.