எனக்கு வரும் பட வாய்ப்புகளை நான் நழுவ விடுவதில்லை : நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆடுகளம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சமீப காலமாக விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு வரும் படங்கள் னால படங்களாக இறுக்கிறது. அதனால் அவற்றை தவற விடுவதில்லை என்றும், இன்றைய நிலையில், எனக்கு வரும் வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கும் நிலையில் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னை தேடி வரும் படங்களில் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எதுவும் என் கையை நழுவி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக’ கூறியுள்ளார்.