சுத்தமா பிடிக்கவில்லை…இதெல்லாம் ஒரு பாட்டா..? பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி காட்டம்.!
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடி முன்னணி பாடகியாக இருப்பவர் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் படித்த பாடல்கள் இன்றுவரை பலருக்கு பேவரைட்டாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்போது வரும் பாடல்கள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ” இப்போது பல பாடல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால், எந்த பாடலும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சமீபத்தில் ‘ஓ சொல்றியா மாமா ‘ பாடலை கேட்டேன். இதெல்லாம் ஒரு பாடலா? மேலிருந்து கீழாக ஒரே மாதிரிதான் இருக்கிறது.
இதுவே, அந்தப் பாடல் எனக்கு பாட வாய்ப்பு வந்திருந்தால் அதன் நிறம் வேறாக இருந்திருக்கும். ஒரு பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை நன்றாக இருக்கிறது என்பதை ஒரு இசை அமைப்பாளர் தான் அதைப் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் சொன்னபடியே ஒரு பாடகர்கள் பாடுகிறார்கள். நாம் பாடிய பாடல்கள் இன்று வரை நிற்கக் காரணம் இருக்கிறது.
ஏனென்றால், எங்களின் வேலை மிகவும் நேர்மையானது. பாடல்கள் மட்டுமில்லை, படங்களும் அப்படித்தான். அந்த காலத்தில் ஒவ்வொரு படமும் 250 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.இப்போது 10 நாட்கள் நடித்தால் அருமை என்கிறார்கள்” என்று பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி சற்று கோபத்துடன் பேசியுள்ளார்.