இது உண்மையா என்பது எனக்கு தெரியவில்லை : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழகத்தை மத்திய அரசு நசுக்குவதாக கூறுவது உண்மையா என தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசுக்கு இந்திய முழுவதும் வரவேற்பும், செல்வாக்கும் அதிஅக்ரிது வருகிறது. தமிழகத்தின் குளறுபடியால், இங்கு வரவேண்டிய நிறைய தொழிற்சாலைகள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.