இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை போல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்துவருகிறார். இந்நிலையில், எப்போதும் தனக்கு மனதில் படும் விஷயங்கள் அல்லது அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு மிஷ்கின் வெளிப்படையாக பதில் அளித்துவிடுவார்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஷ்கினிடம் தொகுப்பாளர் ஒருவர் சார் நீங்கள் லியோ படத்திலும் நடித்துள்ளீர்கள்…மாவீரன் படத்திலும் நடித்துள்ளீர்கள் உங்களுக்கு இந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதா..? என கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த மிஷ்கின் ” எனக்கு ஒரு எதிர்பார்ப்பும் கிடையவே கிடையாது. இரண்டு படங்களையும் நான் கொஞ்ச நாட்கள் கழித்து தான் பார்ப்பேன். கிட்டத்தட்ட இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியது என்றால் மட்டும் தான் பார்ப்பேன். அப்படி ஓடவில்லை என்றால் கண்டிப்பாக பார்க்கவேமாட்டேன்.
இப்போது சமீபகாலமாக நான் படங்களே பார்ப்பதில்லை. ரொம்ப குறைவாக சில படங்களை மட்டும் தான் பார்ப்பேன். ஐயோ நான் இன்னும் நன்றாக நடிக்கவேண்டும் சம்பளம் அதிகமாக வாங்கவேண்டும் கடற்கரை ஓரம் வீடு வாங்கவேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை.
நடிப்பது மிகவும் ஜாலியாக இருக்கிறது. அதுனால் படங்களில் நடிக்கிறேன்” என கூறியுள்ளார். இவர் லியோ, மாவீரன் படங்களை பார்க்கமாட்டேன் என கூறியுள்ளது விஜய் மற்றும் சிவகார்திகேயன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…