“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

இட்லிகடை திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.

Good Bad Ugly VS IDLY KADAI

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. எனவே, படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அதே தேதியில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது.

எனவே, ஒரே தேதியில் அஜித் மற்றும் தனுஷ் படங்கள் வெளியாகிறது என்பதால் நிச்சியமாக இரண்டு படங்களில் மீதும் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமானது. ஆனால், வசூல் ரீதியாக வைத்து பார்த்தால் ஓப்பனிங் அஜித் படத்திற்கு அதிகமாக கிடைக்கும். எனவே, அதே தேதியில் தனுஷ் இட்லிகடை படத்தை வெளியீடுவாரா? அல்லது ரிலீஸ் தேதி தள்ளி செல்லுமா? எனவும் கேள்விகள் எழும்பியது.

இதனையடுத்து, ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை அதே தேதியில் சொன்னபடி இறங்குவேன் என படத்தில் இருந்து போஸ்டர்கள் தற்போது  வெளியாகியுள்ளது. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணத்தால் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, திட்டமிட்டபடி எந்த மாற்றமும் இல்லாமல் இட்லிகடை சொன்ன அதே தேதியில் குட் பேட் அக்லி படத்துடன் வெளியாகும் என இதன் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்களை வைத்து பார்க்கையில் நிச்சயமாக இட்லிகடை ஒரு கிராமத்தில் நாடாகும் கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்