நடிகையாக இருப்பதால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை- ரெஜினா கெஸாண்ட்ரா.!
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா. தமிழ் சினிமாவில் “கண்டநாள் முதல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.
அந்த படத்தை தொடர்ந்து சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இதற்கிடையில், ரெஜினா கொரடலா இயக்கியத்தில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் சானா கஷ்டம் என்ற பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார். கவர்ச்சியான பாடல்களில் நடிப்பது குறித்து ரெஜினா சமீபத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது “கவர்ச்சியான பாடல்களில் நடிப்பதால் ஒரு பெண்ணியவாதியாக அது என் சித்தாந்தத்தைப் பாதிப்பதில்லை. அது பற்றி விமர்சனம் வந்தாலும் அதற்கெல்லாம் நான் கோபப்படுவதில்லை. உருப்படியான நல்ல பாடலாக இருந்தாலும் சரி, கொண்டாட்டப் பாடலாக இருந்தாலும் சரி, ஒரு நடிகையாக இருப்பதால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை” என கூறியுள்ளார்.