நடிக்க வாய்ப்பு கிடைக்கல…பிச்சை எடுக்க போனேன்….பிரபல நடிகை வேதனை.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சுபீதா. இவர் சீரியல்களை தவிர்த்து சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக பிச்சை எடுக்க சென்றதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை சுபீதா ” நான் சினிமாவிற்கு 13-வயதிலே நடிக்கவந்துவிட்டேன். எனக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். என் கணவரும் உடல் நல குறைவால் இறந்துவிட்டார். பிறகு பிள்ளைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
பிறகு சினிமாவில் பெரிதாக வருமானம் இல்லை என்ற காரணத்தால் சீரியல் பக்கம் வந்தேன். சில பெரிய சீரியல்களில் நடித்தேன். அப்படி இருந்து வருமானம் சரியாக வரவில்லை. என்னுடைய இரண்டு மகன்களில் 1 மகன் திருமணம் ஆகி அவருடைய வாழ்க்கையை பார்த்துவருகிறார். மற்றோரு பையன் மட்டும் சினிமாவில் ஸ்டன்ட் டைரக்டராக முயற்சி செய்து வருகிறார்.
பிறகு நடிப்பதை கொஞ்ச காலம் விட்டிருந்தேன். பின், நடிப்பை மீண்டும் தொடங்கலாம் என்று நடிக்க வாய்ப்பு தேடத் தொடங்கினேன். ஆனால் எனக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் என்னை அறியாமலேயே ஒரு நாள் போய் பிச்சை எடுக்கத் தொடங்கிட்டேன்” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.