அவசரப்பட்டு செய்துவிட்டேன்…சீரியல் நடிகைகளை கல்யாணம் பண்ணாதீங்க…செந்தில் கூறிய பகீர் தகவல்.!!
சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீஜாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்தது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிர்ச்சி செந்தில் ” சீரியல் நடிகர்கள், நடிகைகளை திருமணம் செய்துகொள்வது மிகவும் தவறான ஒன்று” என கூறியுள்ளார். இது குறித்து பேசிய செந்தில் ” இப்போது இருக்கும் காலகட்டத்தில் நடிகர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா..? அவர்கள் சீரியல்களில் யாருடன் இணைந்து நடிக்கிறார்களோ அவர்களை அந்த கதாபாத்திரங்களிலே பார்த்து காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய தவறு தான். நானும் அப்படித்தானே ஸ்ரீஜாவவுடன் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவளை மீனாட்சியாகவே பார்த்து காதலித்தேன் திருமணமும் செய்துகொண்டேன். ஆனால் மீனாட்சி கேரக்டர் வேற…ஸ்ரீஜா கேரக்டர் வேற.
அவர் மீனாட்சி கேரக்டர் போலவே ஸ்ரீஜா கேரக்டர் இருக்கும் என நினைத்து அவசரபட்டு திருமணம் செய்துவிட்டேன். நான் ஏதாவது சொன்னால் கூட நீ எதற்கு என்னை எதுக்கு சொல்ற என்று கோபப்படும் பிடிவாதம் பிடித்தவர். ஸ்ரீஜாவின் ஒரு சில குணங்களை மட்டுமே தெரிந்து கொண்டு அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டேன். சீரியல் நடிகைகளை கல்யாணம் பண்ணாதீங்க. எனவும் கூறியுள்ளார்.
சீரியல் நடிகைகளை திருமணம் செய்து கொள்வது தவறு என மிர்ச்சி செந்தில் கூறியுள்ளது தற்போது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மிர்ச்சி செந்தில் தற்போது பல சீரியல்களில், பல திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.