அந்த ஒரு காட்சியால் சினிமா தேவையானு அழுதேன்! ‘வீர திருமகன்’ படத்தால் நொந்துபோன சச்சு!
தமிழ் சினிமாவில் 1952-ஆம் ஆண்டு வெளியான ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சச்சு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷியாமளா, தேவதாசு, அவ்வையார், மருமகள், சொர்கவாசல், ராஜா தேசிங்கு , வீர திருமகன், நிரை குடம் , உருமைக்குரல், ஊருக்கு ஒரு பிள்ளை , தில்லு முல்லு (2013), இரும்பு குதிரை , கெத்து, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஒரு காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் சமீபகாலமாக அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ஒரு சமயத்தில் தனக்கு இந்த சினிமா வேண்டுமா என்கிற அளவிற்கு யோசித்தாராம். அதற்கு காரணமே ஒரு திரைப்படத்தில் நடித்த காட்சி தான் காரணமாம்.
அது என்ன படத்தில் உள்ள காட்சி என்றால் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் சி.எல்.ஆனந்தன் நடிப்பில் வெளியான ‘வீர திருமகன்’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகை சச்சு அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை சச்சு மிகவும் கஷ்டப்பட்டாராம். ஏனென்றால், இந்த படத்தில் நடிக்கும் போது தான் அவர் வளர்ந்து வந்த நடிகை.
இந்த ‘வீர திருமகன்’ திரைப்படத்திலும் பல சவாலான காட்சிகள் வரும் என்பதால் அந்த சமயம் நடிக்கவே அவர் மிகவும் கஷ்ட்டப்பட்டாராம். படத்தில் வரும் ஒரு காட்சியில் கண்களை சிமிட்டால் நடிக்க வேண்டுமாம். அந்த காட்சியின் போது சுத்தமாக நடிக்கவே வரவில்லை என்ற காரணத்தால் இயக்குனரிடம் பயங்கரமாக திட்டுவாங்கினாராம்.
பிறகு வீட்டிற்கு சென்று தன்னுடைய அம்மா மடியில் படுத்துக்கொண்டு இப்படி பட்ட ஒரு சினிமா வேண்டுமா என்று கண்கலங்கி அழுதாராம். பிறகு படத்தில் பாதி காட்சிகள் நடித்துக்கொடுத்துவிட்டோம். இன்னும் சில காட்சிகள் தான் இருக்கிறது அதிலும் நடித்து கொடுத்துவிடுவோம் என்று யோசித்து படத்தில் நடித்து கொடுத்தாராம். ஆனால், சினிமாவில் நடித்த அனுபவத்திலேயே இதனை மட்டுமே மறக்கவே மாட்டேன் எனவும் பேட்டி ஒன்றில் சச்சியே தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்க சச்சு மிகவும் கஷ்ட்டப்பட்டிருந்தாலும் கூட அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே கூறலாம். இந்த ‘வீர திருமகன்’ திரைப்படத்தில் நடித்த பிறகு தான் சச்சுக்கு அடுத்ததாக படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. மேலும், நடிகை சச்சு கடைசியாக வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.