என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக கருதுகிறேன்! nkp பட நடிகை ஓபன் டாக்!
நடிகை வித்யாபாலன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, இந்தி திரையுலகில் முன்னை கதாநாயகியாக திகழ்கிறார். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைபபடத்தில், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பொதுவாக திரையுலகில், 26 வயதில் நடிகைகள் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால், நான் 26 வயதில் தான் சினிமாவிற்குள்ளேயே நுழைந்தேன். எனவே, என்னுடைய திரைப்பயணம் குறுகிய காலத்திலேயே முடிந்து விடும் என்று நினைத்தேன்.
ஆனால், தற்போது 40 வயதாகியுள்ள நான் 14 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன் என்றும், என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறன் என்றும் கூறியுள்ளார்.