படம் பார்த்தேன் பேசவே முடியல : ‘வாழை’ பார்த்து எமோஷனலான சுதா கொங்கரா!

சென்னை : வாழை படம் தன்னுடைய மனதில் பெரிய தாக்கத்தை உண்டு செய்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வாழை படம் மக்களை எமோஷனலாக்கி பலத்த வரவேற்பை பெரும் வரும் நிலையில், படத்தினை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள். குறிப்பாக, இயக்குனர் பாலா, சூரி, ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தார்கள்.
அந்த வகையில், படத்தை பார்த்துவிட்டு படம் பற்றி பேசவே முடியாத அளவுக்கு எமோஷலான இயக்குனர் சுதா கொங்கரா படம் பற்றி சில விஷயங்களை பேசி இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். படம் பார்த்துவிட்டு பேசிய அவர் ” உண்மையில் தன்னுடைய வாழ்வில் நடந்த இவ்வளவு சோகமான சம்பவத்தை மக்களுக்கு படமாக காண்பிக்க ஒரு பெரிய தைரியம் வேண்டும்.
அந்த தைரியமும், அப்படி படமாக காண்பிக்க என்னால் உண்மையாகவே முடியாது. ஆனால், மாரி செல்வராஜ் அதனை கையில் எடுத்து மிகவும் அருமையாக காண்பித்து இருக்கிறார்” என சுதா கொங்கரா கூறினார். படம் பார்த்துவிட்டு ரொம்பவே எமோஷனலானதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, படம் பார்க்கும்போது அந்த பயனுக்கு எதுவும் ஆகக்கூடாது என கடவுளிடம் படம் பார்க்கும்போது வேண்டினேன் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய சுதா கொங்கரா மாரி செல்வராஜுடன் தன்னுடைய நட்பை பற்றி பேசி அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ” மாரி செல்வராஜை இயக்குனர் ராமுடைய உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அவர் இப்படி ஒரு படத்தை எடுத்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
படம் பார்த்துவிட்டு நான் கொஞ்சம் நேரம் திரையரங்கில் அமைதியாக அமர்ந்திருந்தேன். ஏனென்றால், அந்த படம் என்னை அந்த அளவுக்கு உள்ளே கொண்டு சென்று தாக்கத்தை உண்டு செய்தது. இப்படி ஒரு படத்தை கொடுத்த மாரி செல்வராஜுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” எனவும் சுதா கொங்கரா பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025