சமந்தா : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பெரிய படங்களை தவறவிட்டது உண்டு. அப்படி தான் நடிகை சமந்தாவும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதனை வேண்டாம் என நடிக்க மறுத்தாராம். அது என்ன படம் என்றால் அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த பில்லா படம் தான்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். ஆனால், முதன் முதலாக இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்ததே சமந்தா தானாம். படத்தில் நடிக்க வைக்க சமந்தாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், படத்தில் பிகினி உடையில் வருவது போல சில காட்சிகள் இருந்தது. எனவே, அந்த மாதிரி உடையையும் படத்தில் அணியவேண்டி இருந்தது.
இந்த காட்சிகளையும், உடைகளையும் பற்றி இயக்குனர் சமந்தாவிடம் பேசும்போது என்னால் முடியாது எனக்கு இந்த மாதிரி உடைகள் எல்லாம் போட பிடிக்கவே பிடிக்காது. இந்த உடைக்கு பதிலாக கீழே கொஞ்சம் துணி வைத்து உடை தாருங்கள் அதனை போட்டுகொண்டு நான் நடிக்கிறேன் என்று கூறினாராம். அதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
இதன் காரணமாக சமந்தா இந்த படத்தில் இருந்து விலகினாராம். அதன்பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு நயன்தாராவும் சென்றதாம். இந்த ஆச்சரியமான தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் பில்லா படத்தில் நயன்தாராவை தவிர வேறு யாருமே அப்படி நடித்திருக்க முடியாது என்று கூறிவருகிறார்கள்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…