என்னால முடியாது! அந்த காரணத்திற்காக அஜித் படத்தை உதறி தள்ளிய சமந்தா?

ajithkumar and samantha

சமந்தா : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பெரிய படங்களை தவறவிட்டது உண்டு. அப்படி தான் நடிகை சமந்தாவும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதனை வேண்டாம் என நடிக்க மறுத்தாராம். அது என்ன படம் என்றால் அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த பில்லா படம் தான்.

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். ஆனால், முதன் முதலாக இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்ததே சமந்தா தானாம். படத்தில் நடிக்க வைக்க சமந்தாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், படத்தில் பிகினி உடையில் வருவது போல சில காட்சிகள் இருந்தது. எனவே, அந்த மாதிரி உடையையும் படத்தில் அணியவேண்டி இருந்தது.

இந்த காட்சிகளையும், உடைகளையும் பற்றி இயக்குனர் சமந்தாவிடம் பேசும்போது என்னால் முடியாது எனக்கு இந்த மாதிரி உடைகள் எல்லாம் போட பிடிக்கவே பிடிக்காது. இந்த உடைக்கு பதிலாக கீழே கொஞ்சம் துணி வைத்து உடை தாருங்கள் அதனை போட்டுகொண்டு நான் நடிக்கிறேன் என்று கூறினாராம். அதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

இதன் காரணமாக சமந்தா இந்த படத்தில் இருந்து விலகினாராம். அதன்பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு நயன்தாராவும் சென்றதாம். இந்த ஆச்சரியமான தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் பில்லா படத்தில் நயன்தாராவை தவிர வேறு யாருமே அப்படி நடித்திருக்க முடியாது என்று கூறிவருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்