என்னால் நம்பவே முடியவில்லை! ஆடை பட இயக்குனர் ட்வீட்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பெண்கள் கால்பந்தாட்டய் மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ், மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ஆடை பட இயக்குனரான ரத்னகுமார், இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இயக்குனர் கனகராஜுடன் இணைந்து திரைக்கதை அமைக்க உள்ளார். இதுகுறித்து ரத்னகுமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என்னால் நம்ப முடியவில்லை. விஜய் அண்ணாவுடனும், எனது நண்பன் லோகேஷ் கனகராஜுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன். படக்குழுவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
Cant believe this ????. Joining hands with Thalapathy @actorvijay na sharing pen & paper with Dear friend @Dir_Lokesh as Additional Screenplay Writer. Thank you Machi.????????. Thanks to fellow writer Pon Parthipan sir. Special thanks to @Jagadishbliss bro for roping me. #Thalapathy64 pic.twitter.com/QP4Jb9aKgM
— Rathna kumar (@MrRathna) October 3, 2019