தலை வணங்குகிறேன்…’ஆஸ்கர்’ வென்ற “ஆர்.ஆர்.ஆர்” படக்குழுவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..!
ஆஸ்கர் வென்ற RRR படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெற்று முடிந்த நிலையில், “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு ” பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் 95-வது ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.
இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். ஒரு பக்கம் பாராட்டு மழை குவிந்து வருகிறது என்றே கூறலாம்.
My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.
— Rajinikanth (@rajinikanth) March 13, 2023
இந்த நிலையில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்டர் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் கூறியதாவது ” ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கீரவாணி, திரு. ராஜமௌலி மற்றும் ஸ்ரீ. பெருமைக்குரிய ஆஸ்கார் விருதைப் பெற்றதற்காக கார்த்திகி கோன்சால்வ்ஸ். பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.