மணிரத்னம் கேட்டு நான் “நோ ” சொல்லிட்டேன்.! அதற்காக வருத்தப்படவில்லை.! அமலா பால் ஓபன் டாக்.!

Default Image

இயக்குனர் மணிரத்னம் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் கூட அவரது படத்தில் நடிக்க சில நடிகர்கள், நடிகைகள் மறுப்பு தெரிவிப்பதே இல்லை. ஆனால் தற்போது நடிகை அமலா பால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

mani ratnam amala paul

ஆம், மிகப்பெரிய பட்ஜெட்டில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்னம் அமலா பாலிடம் கேட்டுள்ளாராம். ஆனால் அமலா பால் சில காரணங்கள் மறுத்துவிட்டதாக அவரே சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- திட்டி தீர்த்த கலைஞர்… கதறி அழுத யுவன்.! சிக்ரெட் தகவலை கூறிய பிரபல இயக்குனர்.!

mani ratnam and amala paul

இது தொடர்பாக பேசிய அவர் “நான்  மணிரத்னம் சருடைய மிகபெரிய ரசிகை. அவருடைய ஒரு படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு நான் ஒருமுறை சென்று இருக்கிறேன். ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021-ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்.

amalapaul

ஆனால் அதில் நடிக்க கூடிய மன நிலையில் நான் இல்லை, அதனால் முடியாது என மறுத்துவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் “இல்லை” என்று தான் சொல்வேன்” என தெரிவித்துள்ளார் அமலா பால்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்