ARRahmanConcert : மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன்! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

arr rahman concert

இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை நடத்தினார். நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசைக்கச்சேரி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்காமல் சர்ச்சையாகவும் வருத்தத்தமாகவும் முடிந்தது.  ஏனென்றால், இசை கச்சேரிக்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லை.

இதன் காரணமாகவே ஆசையாக இசை கச்சேரி பார்க்கவேண்டும் என வருகை தந்தவர்கள் பல மணி நேரம் காத்திருந்ததற்கு பிறகு தான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியை காண வருவதற்காக வைரம்,தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என ரூ.2,000 முதல் 20,000 வரை செலவு செய்து டிக்கெட் வாங்கி கொண்டு வருகை தந்தார்கள். இருப்பினும், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் கூட இசையை கச்சேரியை பார்க்க நூற்றுக்கணக்கானவர்களுக்கு இடம் கூட கிடைக்கவில்லை.

மொத்தமாக 20,000 இருக்கைகள் கிட்ட இருந்த அந்த இடத்தில் அதற்கு மேல் பலரும் கூட்டமாக கூடிய காரணத்தால் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறினார்கள். இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் கச்சேரி முடிவதற்கு முன்பே பாதியிலேயே வீட்டிற்கு சென்றனர்.

இதனையடுத்து,  இசையமைப்பாளர் ஏ.ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் இசைக்கச்சேரி பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், [email protected] இ-மெயில் முகவரிக்கு, டிக்கெட் நகலுடன் உங்கள் குறைகளை அனுப்பவும்” எனவும் அறிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன். உலகத் தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு இசை நிகழ்ச்சிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல்களை நாம் உருவாக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்