தமிழ் சினிமாவில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தற்போது “விக்ராந்த் ரோணா” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ளார். கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நீதா அசோக், நிரூப் பண்டாரி, ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மற்றும் வாசுகி வைபவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, இன்று படத்தின் டிரைலர் தற்போது 6 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதன் தமிழ் டிரைலரை முன்னணி நடிகரான தனுஷ் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில், ஹீரோ சுதீப் இன்ஸ்பெக்ட்டர் கதாபாத்திரத்தில் ஒரு வினோதமான பேய்யால் பயந்து கிடக்கும் ஊருக்கு செல்கிறார்.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே மையமாக வைத்து தான் படத்தை எடுக்கப்பட்டுள்ளது போல காமிக்கபட்டுள்ளது. இந்த டிரைலர் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால் ரசிகர்கள் அடுத்த கேஜிஎப் எனவும் அதிகளவு வசூலை குவிக்கும் எனவும் கூறிவருகிறார்கள்.
மேலும், இந்த படம் கேஜிஎப்பை மிஞ்சிம் வகையில். ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளது. கேஜிஎப் 2 படம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு வெளியாகவில்லை. ஆனால், விக்ராந்த் ரோணா படம் தமிழ், ஆங்கிலம்,கன்னடம், ஹிந்தி, தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…