Dhivya Duraisamy : ஐட்டம் பாடல்களில் நடனம் ஆட குறிப்பிட்ட நடிகர்களின் படம் என்றால் ஓகே என திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் பல முன்னணி நடிகைகள் படங்களில் இடம்பெறும் ஒரு பாடல் அதாவது ஐட்டம் பாடல் அல்லது குத்து பாடல்களில் நடனமாடுவது வழக்கமான ஒன்று. அப்படி இதுவரை சிம்ரன், நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல நடிகைகள் படங்களில் இடம்பெற்ற ஒரு பாடல்களில் நடனம் ஆடி இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் இந்த மாதிரி ஒரு பாடலில் நடனம் ஆட விரும்பினாலும் ஒரு சில நடிகைகள் விரும்புவது கிடையாது.
அந்த வகையில், புகைப்படங்களை வெளியீட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை திவ்யா துரைசாமி குறிப்பிட்ட ஹீரோக்களின் படங்கள் என்றால் மட்டுமே தான் அந்த மாதிரி படங்களில் நடனம் ஆடுவேன் என்று கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தால் நடனம் ஆடுவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு பதில் அளித்த திவ்யா துரைசாமி ” எனக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்தால் கண்டிப்பாக நான் அந்த மாதிரி பாடலில் நடனம் ஆட ஓகே சொல்வேன். அந்த நடிகர்களின் பெயரை சொன்னால் நான் விளம்பரத்திற்காக சொல்கிறேன் என்று நினைப்பார்கள். உண்மையில் எனக்கு விஜய், அஜித், தனுஷ், கார்த்தி ஆகிய நடிகர்களை ரொம்பவே பிடிக்கும்.
இவர்களுடைய படங்களில் அப்படியான கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது என்றால் கண்டிப்பாக நான் ஆடுவேன். வாய்ப்பு கிடைக்காது இருந்தாலும் அப்படி இவர்கள் தங்களுடைய படங்களுக்கு என்னை ஓகே செய்தால் அந்த பாடல்களுக்கு நானும் சம்மதம் தெரிவிப்பேன்” என திவ்யா துரைசாமி கூறியுள்ளார். மேலும் திவ்யா துரைசாமி கடைசியாக ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…