இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தற்போது நானே வருவேன், விருமன், லத்தி, பரம் பொருள் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு டிசர்ட் மற்றும் கருப்பு வேட்டி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு அதில் “கருப்பு திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு யுவன், கடந்த ஆண்டு தமிழ் பேசும் இந்தியன் எனும் டிசர்ட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் . அது பேசும் பொருளானது. அதனை தொடர்ந்து தற்போது “கருப்பு திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டிருக்கும் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், அம்பேத்காருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் இளையராஜா கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…