நான் வெறும் ராஜேந்திரன் இல்ல! கெத்தாக பேசும் மீசை ராஜேந்திரன்!
தமிழ் சினிமாவில் வில்லன், காமெடியன் என படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். பட வாய்ப்புகள் இல்லத்தில் காரணத்தால் தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபகாலமாகவே மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அவர் விஜய்யை பற்றி பேசியதும் லியோ படத்தின் வசூல் பற்றியும் பேசியது தான். லியோ வசூலை பற்றி அவர் மிகவும் விமர்சித்து பேசியிருந்தார்.
அப்படி என்ன பேசினார் என்றால் ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டையை பார்த்துவிட்டு லியோ படக்குழு பயந்துவிட்டதாகவும் லியோ படம் 1000 கோடி வசூலை எல்லாம் தொட வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் லியோ ஜெயிலர் படத்தின் வசூலை கூட தொடுவது சந்தேகம் தான் அப்படி ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.
லியோ படம் 2.0 படத்தை மிஞ்சினால் மீசையை எடுக்குறேன்! அப்படியே அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன்!
பிறகு லியோ படம் வெளியாகும் சமயத்தில் மற்றோரு பேட்டியில் லியோ படம் 2.0 படத்தின் வசூலை முறியடித்தால் நான் மீசையை எடுக்கிறேன் என மாற்றி பேசியிருந்தார். அதன் பிறகு விஜய் ரசிகர்கள் ரெடியாக இருங்கள் படம் வெளியாவ போகிறது மீசையை எடுக்கவேண்டும் என்று கூறிவந்தனர். பின் நாம் மீசையை எடுக்கிறேன் என்று சொன்னது தவறு தான் எனவும் கூறியிருந்தார்.
அதன் பிறகு லியோ படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் லியோ படம் அருமையாக உள்ளது மீசை ராஜேந்திரன் மீசையை எடுக்க தயாராக இருங்கள் என கூறிவந்தனர்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மீசை ராஜேந்திரன் தான் லியோ படத்தை பார்த்துவிட்டதாகவும் படம் சுமாராக இருப்பதாகவும் கூறிஉள்ளார். அது மட்டுமின்றி நான் மீண்டும் சொல்கிறேன் ஜெயிலர் படத்தின் வசூலையும், 2.0 படத்தின் வசூலையும் லியோ படம் முறியடித்துவிட்டால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். படம் பார்த்ததை வைத்து தான் நான் இவ்வளவு உறுதியாக சொல்கிறேன்.
மீசையை எடுக்கிறேன் சொன்னது தப்பு தான்! பதட்டத்தில் பேச்சை மாற்றிய ராஜேந்திரன்!
லியோ படம் அந்த படங்களுக்கு இணையாக வசூல் செய்ய வாய்ப்பு இல்லை. நான் வெறும் ராஜேந்திரன் இல்ல மீசை ராஜேந்திரன்” என மிகவும் கெத்தாக பேசியிருக்கிறார். இவர் பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள் மீண்டும் சற்று கடுப்பாகி அவரை திட்டி தீர்க்க தொடங்கியுள்ளனர்.