நான் அக்கா இல்லை அவனுக்கு அம்மா! நடிகை தேவயானி எமோஷனல்!
நகுல் : நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடிகர் நகுல் தனக்கு செட் ஆகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷன் ஒரு பகுதியாக சென்னையில் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகையும், நடிகர் நகுலின் அக்காவுமான தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்டு பேசிய தேவயானி நகுல்க்கு நான் அக்கா இல்லை அம்மா என எமோஷனலாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய தேவயானி ” நான் நகுல் அக்கா என்பதை தாண்டி அவருடைய ரசிகை என்று தான் சொல்லவேண்டும். பாய்ஸ் படத்தில் இருந்து அதற்கு அடுத்ததாக காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த விதம் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். அந்த அளவிற்கு முழுவதுமாக வித்தியாசமாக மாறி வேறுமாதிரி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அந்த மாதிரி ஒரு பல திறமைகளை கொண்ட நடிகர் என்னுடைய தம்பி நகுல். நல்ல கதையும், நல்ல இயக்குனரும் கிடைத்தது என்றால் கண்டிப்பாக அவருடைய படம் பெரிய அளவில் பேசப்படும். என்னுடைய தம்பி என்ற காரணத்தால் நான் இதனை சொல்லவில்லை. உண்மையாகவே அவன் நல்ல நடிகர். அவர் நடித்துள்ள இந்த வாஸ்கோடகாமா படத்திற்கு நல்ல ஆதரவு கொடுங்கள். நகுலிற்கு நான் அக்கா மட்டும் இல்லை அவனுக்கு நான் அம்மா. படம் நன்றாக வந்து இருக்கிறது” எனவும் நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். தன்னை பற்றி அக்கா தேவயானி பேச பேச நகுல் கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்துக்கொண்டிருந்தார்.