எம்.எஸ்.பாஸ்கர் : பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா சென்னையில், நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவில் விதார்த், கனல் கண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ரவிக்குமார், செல்ல அய்யாவு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் ” நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான் அது என்னவென்றால், நீங்கள் ஒரு படத்தை பார்க்கிறீர்கள் அந்த படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதனை 4 பேரிடம் சொல்லி மகிழுங்கள். அப்படி அந்த படம் பிடிக்கவில்லை என்றால் அதனை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அதனை விட்டுவிட்டு படத்திற்கு போகும் அடுத்தவர்களை படம் மொக்கை போகவேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
இதனை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பதற்கு எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் எவ்வளவு பேர் கஷ்டபடுகிறார்கள் என்று அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். எவ்வளவோ பேர் படப்பிடிப்பில் ஏற்படும் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். ஒரு படத்தை எடுப்பதில் அந்த மாதிரி பல கஷ்டங்கள் இருக்கிறது. அந்த மாதிரி கஷ்ட்டப்பட்டு எடுக்கப்படும் படங்களை பார்த்துவிட்டு நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள்.
படம் பிடிக்கிறது என்றால் கொண்டாடுங்கள். படம் அப்படி பிடிக்கவே இல்லை என்றால் பேசாம இருந்து விடுங்கள். எல்லோரும் படத்தை பார்க்கட்டும். படம் பார்க்க செலவு செய்யும் 120 , 200 ரூபாயில் நாம் கோபுரம் கட்ட போறது இல்ல. ஆனால், நல்லா இருக்கும் படங்களுக்கும், நல்லா இல்லாத படங்களுக்கும் நீங்கள் வருகை தந்து பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நிறைய பேர் என்னிடம் சிறிய படங்கள் செய்கிறீர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களில் ஏன் நடிப்பது இல்லை என்று. நான் நடிக்க தயாராக தான் இருக்கிறேன். ஆனால், ஒண்ணே ஒன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன். சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருக்க ஆசைப்படுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…