Aishwarya Rajesh : நான் இனிமே குடும்ப குத்துவிளக்கு இல்ல! அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு இவர் கடைசியாக நடித்த தீரா காதல் திரைப்படம் வரை எந்த திரைப்படமும் சரியான வெற்றியை பெறவில்லை. இருந்து அதெல்லாம் கண்டுகொள்ளாத ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் கமிட் செய்து நடித்து கொடுத்து வருகிறார்.

இதற்கிடையில், அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது மார்டன் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இனிமேல் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப குத்துவிளக்கு இல்ல என கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்கா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.