நான் தான் படிக்கல…இப்படி மாட்டிகிட்டேன்.! உதவியாளரிடம் வருத்தப்பட்ட கமல்ஹாசன்.!
உலக நயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன், நடிப்பையும் தவிர்த்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என அனைத்திலும் கலக்க கூடிய ஆள் என்றே சொல்லலாம். இப்படி, கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ‘விருமாண்டி’ திரைப்படம் 2004ல் வெளியாகி, மாபெரும் வரவேற்பு பெற்றது.
வசுல்ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் சாதி அரசியல், மரணதண்டனை போன்ற கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது. இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் என நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
அவ்வப்போது, இப்படம் குறித்து சுவாரிஸ்ய தகவல் படத்துல நடிக்கும் பிரபலங்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, பல்வேறு சிரமங்களை கமல் சந்தித்தது குறித்து இப்படத்தில் நடித்து நடிகரும் கமலுக்கு உதவியாளராக பணிபுரிந்த காதல் சுகுமார் பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசன் எப்போதுமே தனது படத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒன்று செய்து காட்டி சாதிப்பார். அதுபோல், விருமாண்டி படத்திற்கு டப்பிங்க என்ற கான்செப்ட் வேண்டாம் என்று படம் எடுக்கும்போதே தெளிவாக லைவாக பேசுவதை பாடகமாக்கப்பட்டது. இப்படி இருக்கையில், ஒரு நாள் பள்ளிக்கூடம் அருகே ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.
25 கோடிக்கு மல்லுக்கட்டிய கமல்ஹாசன்…தலைசாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!
அப்பொழுது, வகுப்பறையில் மாணவ மாணவிகள் கூச்சலிட்டு இருந்த நிலையில், ஷூட்டிங் போது என்ன ஒரே இரைச்சலாக உள்ளது என்று உதவி இயக்குன காதல் சுகுமாரிடம் கேட்டுள்ளார். அவரும் அருகே பள்ளியில் வகுப்பு நடைபெற்று இருக்கிறது.
நான் சென்று பேசவா சார் என்று கேட்க, அதற்கு கமல் “நான் தான் படிக்கல இப்படி மாட்டிகிட்டேன், அவங்க படிக்கட்டும் நம்ம ஏன் அதை கெடுக்க வேண்டும் என்று கூறியதோடு, பள்ளி முடிந்ததும் இங்கே எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து கொள்ளலாம்” என்று கூறினாராம்.
கமல் தற்போது
இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்துக்கு “Thug Life” தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.