நான் உயிருடன் இருக்கிறேன்…இறப்பில் திருப்பம்.! வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே!
மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தவிட்டதாக நேற்று (பிப்ரவரி 2 ஆம் தேதி) பரபரப்பான செய்தி ஒன்று பரவியது. ஆனால், இன்று “தான் உயிரோடு இருப்பதாக” வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்றைய தினம் பூனம் பாண்டேவின் ‘இறப்பு ‘ செய்தியை அவரது மேலாளர் உறுதி, பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டியிருந்து. இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், நேற்று அவருடைய இறுதிச்சடங்கு மற்றும் அவருடைய குடும்பம் இதனை பற்றி எந்த தகவலுமே தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் உண்மையில் பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி மர்மமாக இருந்தது.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோவில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி பல பெண்களுக்குத் தெரியாது என்றும், பல உயிர்களைப் பலிவாங்கியுள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே புற்றுநோயால் தான் இறந்ததாக அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.
பூனம் பாண்டே மரணத்தில் மர்மம்! உதவியாளர் சொன்ன விஷயம்?
மேலும், தனது இறப்பு செய்தியால் கர்ப்பப்பை வாய் தொற்றுநோய் குறித்து போதுமான விவாதம் எழுந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தற்பொழுது, நான் நலமுடன் இருப்பதாகவும், மரணமடைந்ததாக கூறி வருத்தத்தில் ஆழ்த்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram