என்னை உங்களில் ஒருவனாய் கொண்டாடும் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் : இயக்குனர் அருண்ராஜா காமராஜ்
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனா. இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளை படைத்து, விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்தவர் ரசிகர் ஒருவர், ‘ அந்த அம்மா வா நடிச்சவங்க பேசுவாங்களே ஆசை பட்டா மட்டும் போதாது ஆடம் பிடிக்க தெரியணும்.’ அந்த டயலாக் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் “நன்றி, என்னை உங்களில் ஒருவனாய் கொண்டாடும் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.” என பதிலளித்துள்ளார்.
சார் @Arunrajakamaraj கனா மூவில ஒரு டையலாக் என்னைய ரொம்ப இம்பரஸ் பன்னி இருக்கு சார்
அந்த அம்மா வா நடிச்சவங்க பேசுவாங்களே ஆசை பட்டா மட்டும் போதாது அடம் பிடிக்க தெரியனும் அப்பதான் அது நமக்கு எவ்ளோ பிடிக்கும்னே செம சாரே ???????? https://t.co/hKCyX85fMA
— வில்லாதி வில்லன் அஜித் (@AjiGudiyatham) May 26, 2019