டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து வரும் பார்த்திபன் இந்த படத்தை எந்த மாதிரி கதையை வைத்து இயக்கி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.
இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே தினத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் வெளியாக இருக்கிறது. இந்த சுழலில், ‘டீன்ஸ்’ படத்தினை தைரியமாகவே பார்த்திபன் வெளியிட முடிவெடுத்து இருப்பது இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், ஜூலை 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலையை பார்த்திபன் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது டீன்ஸ் படத்தை பார்க்கவேண்டும் என்றால் 100 ரூபாய் இருந்தால் போதும். டிக்கெட்டின் விலை 100 ரூபாய் மட்டும் தான் என்றும், இது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது “என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன். எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் டீன்ஸ் (TEENZ) படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.100/- மட்டுமே. இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே” என கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் மிகவும் மகிழ்ச்சி , உங்கள் டீன்ஸ் படம் நிச்சயம் வெற்றி பெறும்.
உங்கள் படைப்புகளின் அதீத மீது நம்பிக்கை உண்டு என கூறி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…