நான் அழகா இல்லை,கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை!ஆறுதல் கூறிய படக்குழுவினர்!

- மேடையில் நான் அழகா இல்லை என கூறியதோடு அனைவரின் முன்னே கண்ணீர்விட்டு அழுத நடிகை ஷான்வி ஸ்ரீவத்சா.
- இதனால் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களும் படக்குழுவினரும் ஆறுதல் கூறியுள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான லவ்லி படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான நடிகை ஷான்வி ஸ்ரீவத்சா ஆவார்.பின்னர் இவர் ராஜகோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரவுடி படத்தில் நடித்துள்ளார்.
பின்னர் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னட சினிமாவில் மட்டும் நடித்து வந்துள்ளார்.கன்னட சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து வந்த இவர் அப்போது அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்துள்ளது.அப்போது பேசிய ஷான்வி தெலுங்கு படங்களில் நடிக்க முடியாதது குறித்து பேசியுள்ளார்.அப்போது அவர் நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம்.
தெலுங்கில் ரவுடி படத்திற்கு பின்பு வேறு படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் முடங்கி கிடந்ததாகவும் தினமும் இரவு அதை நினைத்து வருத்தத்தில் அழுததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அவர் தான் ஸ்ரீமன் நாராயணா படத்தில் நடித்துள்ளதாகவும் எனது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்வதாவும் அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.இதனால் அங்குள்ள பத்திரிக்கையாளர்களும் படக்குழுவினரும் ஆறுதல் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.