பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள கடற்கரையில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்த தகவலை வெளியீட்டிருந்தார். அதில் பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார் கடந்த 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார். மருத்துவர்கள் அவரை 2 வாரம் தொடர்ந்து ஓய்வு எடுக்க கூறியிருக்கிறார்கள்.
கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட வீடியோ மூலமாக உங்களிடம் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், சார் பற்றின தவறான வதந்திகளை வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி தான் 90% குணம் அடைந்து விட்டதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது ” அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன் வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…