எனக்கும் அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை இருக்கு…மனம் திறந்த பிரியா பவானி சங்கர்.!!
சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கலந்துகொண்டார்.
அந்த பேட்டியில் தொகுப்பாளர் நீங்கள் எதற்காக பாலா சார் படத்தில் வரும் ஹீரோயின்கள் கதாபாத்திரங்களை போல ஒரு கதாபாத்திரம் கொண்ட படத்தை தேர்ந்து எடுத்து நடிக்கவில்லை..? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் “எனக்கும் அந்த மாதிரி படங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது.
என் எதற்காக எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் வரவில்லை என்று சத்தியமாக தெரியவில்லை. நான் சிரித்தமுகத்துடன் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று சொல்லமாட்டேன். எனக்கு எந்த கதாபத்திரங்கள் நடிக்க கிடைத்தாலும், அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நடித்துவிடுவேன்” என கூறியுள்ளார்.
மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் பொம்மை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, டிமான்டி காலனி 2,அரண்மனை 4 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.