2009 ஆம் ஆண்டு இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயன் ‘. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். நடிகர் ஜெகன் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். பிரபு,அக்ஷிதீப் சைகள், கருணாஸ், பொன்வண்ணன்,ரேணுகா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக ஒரு 8 மாதங்கள் ஜெகனுக்கு பட வாய்ப்புகள் வரவில்லையாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு படத்தின் கதையை கேட்டவுடன் ஜெகன் மிகவும் உற்சாகம் அடைந்து படத்தில் நடித்தாராம்.
எனக்கு காதல் திருமணம் தான் வேணும்! அடம் பிடிக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா!
பிறகு படத்தில் நடித்தபின் சினிமா துறையில் ஜெகனுக்கு நெருக்கமான பலரும் இந்த படத்தில் உன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் கண்டிப்பாக உனக்கு விருதுகள் குவியும் என்று கூறினார்களாம். படமும் அந்த அளவிற்கு நன்றாக இருந்த காரணத்தாலும் கண்டிப்பாக நம்மளுடைய கதாபாத்திரமும் பேசப்படும் எனவும் நினைத்தாராம்.
அதைப்போலவே படமும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி அவருடைய கதாபாத்திரமும் பேசப்பட்டது. ஆனால், இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு 8 மாதம் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் ஜெகன் இருந்தாராம். பிறகு என்னடா நல்ல படத்தில் தானே நடித்திருக்கிறோம் பிறகு எதற்கு பட வாய்ப்புகள் வராமல் போனது என்று யோசித்துவிட்டு இருந்தாராம்.
பின் வீட்டில் இருந்தால் வேலைக்கு ஆகாது என யோசித்து அவருடைய பாஸ் ஒருவருக்கு கால் செய்து எதாவது படத்தில் நடிக்க அல்லது பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தாராம். பிறகு தான் லிங்கு சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான பையா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதன் பிறகு தான் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க தொடங்கினாராம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெகன் பையா திரைப்படத்தை தொடர்ந்து சிக்கு புக்கு, கோ,வெண்மேகம், நான் சிகப்பு மனிதன், இரவும் பகலும் வரும்,ஆவி குமார், மணல் கயிறு , பயமா இருக்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக கோஸ்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…