நடிகை நயன்தாரா படப்பிடிப்பு தளங்களில் சமீபகாலமாக நடந்துகொள்வதை பற்றிய சீக்ரெட் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை வாடகை தாய் மூலம் தத்தெடுத்து இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார். பொதுவாகவே நடிகைகள் திருமணம் முடித்துவிட்டு குழந்தைகளைப்பெற்று கொண்டால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துவிட்டு குழந்தைகளை வளர்ப்பார்கள்.
ஆனால், நயன்தாரா அதனை செய்யாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்துக்கொண்டு இரண்டு குழந்தைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளங்களில் 12 மணி ஆகி விட்டால் என்றாலே மிகவும் பதட்டம் அடைந்து என்னுடைய காட்சிகளை 5 மணிக்குள் எடுத்துவிடுங்கள் என்று இயக்குனரிடம் கூறுகிறாராம்.
பத்து கோடி பத்தாது! புது படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா?
நடிகை நயன்தாரா தற்போது அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா இப்படி நடந்துகொள்கிறாராம். மத்தியான நேரம் ஆகிவிட்டது என்றாலே என்னுடைய காட்சிகளை சீக்கிரம் படம் ஆக்குங்கள் நான் 5 மணிக்கு வீட்டிற்கு செல்லவேண்டும் என்று சொல்கிறாராம். ஏனென்றால், வீட்டில் இரண்டு குழந்தைகள் அவரை தேடுவதால் அதனை பற்றியே படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா யோசிக்கிறாராம்.
கால்ஷீட் இல்லை…கமலுடன் நடிக்க மறுத்த த்ரிஷா.! ஓகே சொல்வாரா நயன்தாரா..?
அப்படியே இரவு நேரங்களில் அல்லது மாலை 6 மணிக்கு பிறகு எடுக்கப்படவேண்டிய காட்சிகள் இருந்தாலும் அதில் நடிக்காமல் கிளம்பி விடுகிறாராம். தனிப்பட்ட காரணங்களுக்காக நயன்தாரா இப்படி செய்வது ஒட்டுமொத்த படக்குழுவையும் கடுப்பாக்கி இருக்கிறதாம். இந்த தகவலை பிரபல சினிமா தகவலை தெரிவிக்கும் வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இதைப்போல மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது கொடைக்கானல் பகுதியில் இருக்கும் ஒரு முந்திரி காட்டில் படம் எடுக்க பூச்சிற்கு பயந்து நயன்தாரா நடிக்க வராமல் இருந்ததாகவும், அதன் காரணமாக சென்னையில் அதைப்போல செட் அமைக்கப்பட்டு படமாக்கபட்டு வந்ததாகவும் தகவல்கள் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…