அந்த விஷயத்தில் சாய் பல்லவியை தான் பாலோவ் பண்ணனும்! அட்வைஸ் கொடுத்த இளம் நடிகை!
மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சாய் பல்லவி தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக அவர் சூர்யா தயாரிப்பில் வெளியான கார்க்கி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘SK21’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சாய் பல்லவியை பற்றி இளம் நடிகை ஹிருத்திகா ஸ்ரீனிவாஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க அதிகமாக ஆசை இருந்தது. சிறிய வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். சிறிய வயதில் இருந்தே நடிகை சாய் பல்லவியை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் தேர்வு செய்து நடித்து வரும் கதைகள் எல்லாம் சூப்பராக இருக்கும். கிடைக்கும் எல்லா படங்களிலும் அவர் நடிக்கமாட்டார்.
புத்தாண்டு அன்று வெடிக்கும் ‘தளபதி 68’ டைட்டில்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்!
சரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எங்களை போல இளம் நடிகைகள் அவரிடம் இருந்து தான் அதனை கற்றுக்கொள்ளவேண்டும். நான் அந்த விஷயத்தில் அவரை தான் பலோவ் செய்கிறேன். அவரை போல கதைகளை தேர்வு செய்து படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
அவர் தான் என்னுடைய ரோல் மாடல்” எனவும் நடிகை ஹிருத்திகா ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய ஹிருத்திகா ஸ்ரீனிவாஸ் ” நன் தற்போது விஜே சன்னி அவருடன் சஞ்சய் ஷெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவுண்ட் பார்ட்டி’ படத்தில் நடித்துமுடித்துள்ளேன். இந்த திரைப்படம் கண்டிப்பாக அனைவர்க்கும் பிடிக்கும் திரைப்படமாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த ‘சவுண்ட் பார்ட்டி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.