இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு அனுமதி.. எவ்வாறு திரையிடப்படும்.?
இந்தியன் 2 : இயக்குனர் ஷங்கர் – நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்பு கட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. தற்போதுள்ள சட்டத்தின்படி, நாளொன்றுக்கு திரையரங்குகள் 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும்.
ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகாவின் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு காட்சி தொடங்கி அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது.
இந்தியன் -2
காலை நேர சிறப்புக் கட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி. pic.twitter.com/GNqSWKWHBm— டீ (@teakkadai1) July 11, 2024