எம்மாடியோ! கல்கி 2898 AD படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?

Kalki 2898 AD

கல்கி 2898 AD : இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கின்ற திரைப்படம் தான் ‘கல்கி 2898 AD’. நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துர்கூர் சாலிமான், கமல்ஹாசன், திஷா பதானி, ராணா டக்குபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், படம் வரும் 27-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும், படத்தின் டிக்கெட் புக்கிங்கும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கல்கி 2898 AD இன் டிக்கெட்டுகள் மும்பை போன்ற நகரங்களில் ரூ. 2,300 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, மும்பை ஜியோ வேர்ல்டு பிளாசாவில் உள்ள BKC திரையரங்கில், ஒரு டிக்கெட் ரூ.2,300க்கு விற்கப்படுகிறது. இதேபோல, LUXE வகை டிக்கெட்டுகள் ரூ1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற நகரங்களில் ரூ.1,100 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கல்கி படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் உத்தரவின்படி, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை ரூ.75 ஆகவும் , மல்டிபிளக்ஸ்களில் ரூ.125 வரை வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்