ஷாருக்கான் படத்தில் இயக்குனர் அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன்முதலாக ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மெர்சல், தெறி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இதனையடுத்து, தற்போது தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்கவுள்ளாராம். இப்படத்தில் இயக்குனருக்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் அட்லீ இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.