கவனம் ஈர்த்ததா மாமன்னன்.! ஒரே நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் உலக முழுவதும் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், பக்ரீத் தினம் அன்று (அதாவது) நேற்று திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் பார்வையாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றே சொல்லாம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது.
மேலும், இது உதயநிதியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக அரசியல் சார்ந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.6 கோடி வசூலித்துள்ளதாகவும், உலக முழுவதும் ரூ.10 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
வைகைப்புயல் வடிவேலுவை இதுவரை இல்லாத ஒரு தீவிர கதாபாத்திரத்தில் காட்டி அவருக்கு எதிராக ஃபஹத் பாசிலை நடிக்க வைத்துள்ளதால் மாமன்னன் திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம்.
இந்த திரைப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.