வேட்டையன் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் படம் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் படத்திற்கு கலவையான விமர்சனத்தை கூறியுள்ளார்கள்.

Vettaiyan Review

சென்னை : ரஜினி படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த படங்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், இந்த முறை வேட்டையன் படத்திற்கு முந்திய படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கொஞ்சம் குறைவான எதிர்பார்ப்புடன் தான் வெளியாகி இருக்கிறது. இன்று உலகம் முழுவதும் படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் திரையரங்குகளில்  கொண்டாடி வருகிறார்கள்.

அத்துடன், படம் பார்த்த மக்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தினை திரையரங்குகளில் சென்று பார்த்துவிட்டு நெட்டிசன்கள், மற்றும் சினிமா விமர்சகர்கள் எக்ஸ் வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

படம் பார்த்த ஒருவர் ” தலைவர் எப்பவும் போல படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பஹத் பாசில் நடித்த கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால், ராணா, அமிதாப் பச்சன் ஆகியோர் கதாபாத்திரம் சரியாக இல்லை. அனிருத் இசை நன்றாக இருக்கிறது. ஆனால் சிதறிய திரைக்கதை & வழக்கமான காட்சிகள் உணர்வுபூர்வமாக மிகக் குறைவான தாக்கத்தையே அளிக்கின்றன” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” வேட்டையன் படம் சுமாராக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் வரும் காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. 2ம் பாதி மாஸ் ஃபைட் சீக்வென்ஸ் & சில எமோஷனல் பகுதிகள் நம்மலுடன் கனெக்ட் ஆனது. இரண்டாம் பாதியில் சில பின்னடைவுகள் இருப்பது தான் படத்திற்கு எதிர்மறை. படத்தில் அனிருத் பின்னணி இசை பாடல்கள் அருமையாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு நேர்த்தியான, மாஸ் & கிளாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர், இது ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களால் விரும்பப்படும் படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” வேட்டையன் படம் ஒரு பொழுதுபோக்கு மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையுடன் ஒரு இனவாத புலனாய்வு திரில்லர் படமாக அமைந்துள்ளது. என்கவுண்டர்ஸ் பின்னணியில் படத்தை கொண்டு சென்றது அருமையாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் தனது மாஸ் பக்கமும் சீரியஸ் நடிப்பையும் காட்டுகிறார். தலைவர் ரசிகர்களுக்கும் பொது ரசிகர்களுக்கும் இந்த படம் விருந்தாக அமையும்.

மற்றொருவர் ” வேட்டையன் படம் சரியாக இல்லை. பெரிய உணர்ச்சி இணைப்பு இல்லை. விசாரணைக் கதையில் மிகவும் இழுபறியான திரைக்கதை. படத்தின் நீளம் மிகப்பெரிய ஒரு நெகட்டிவ்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” வேட்டையன் படம் கண்டிப்பாக வெற்றியடையும். ரஜினியின் ஆரவாரம், முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதியில் அசத்தல், DOP மற்றும் BGM ஆகியவை  படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க தலைவர் தான் படத்தில். ஃபாஃபா கதாபாத்திரம் நன்றாக இருந்தது மற்றவர்களுடைய கதாபாத்திரம்  ஓகே, பாடல்கள் நன்றாக உள்ளன” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்