பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது நடித்துமுடித்துள்ள டாடா திரைப்படம் இன்று தமிழகத்தில் 400 திரையரங்குகளில் மேல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் அபர்ணா தாஸ் ஹீரோயினாகவும், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை ப்ரிமியர் ஷோவில் பார்த்த விமர்சகர்களும் நேற்று பாராட்டினார்கள். இதனையடுத்து இன்று டாடா படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டரில் நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனத்தை பார்க்கலாம்.
படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “டாடா சூப்பர் ஃபீல் குட் திரைப்படம். கவின் நல்ல நடிப்புடன் மிளிர்கிறது அபர்ணா தாஸ் நல்ல ஆதரவை கொடுத்திருக்கிறார் . மற்ற நடிகர்களும் நன்றாக இருந்தனர்.
படத்தின் பின்னணி இசை பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” டாடா படத்தை பார்த்துவிட்டு ஒரு காட்சியில் தேம்பி தேம்பி அழுதேன்” என பதிவிட்டுள்ளார். இவர் கூறுவதன் மூலம் படம் எந்த அளவிற்கு எமோஷனலாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.
படத்தை பார்த்த டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ” டாடா திரைப்படம் மிகச்சிறப்பாக இருக்கிறது. ஃபீல் குட் திரைப்படம். கவின், அபர்ணா தாஸ் நடிப்பு வேறே லெவல். மொத்தத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் “டாடா திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் யதார்த்தமாக உணர்ந்த படம். ஒவ்வொரு உணர்ச்சிகளின் சரியான கலவை. க்ளைமாக்ஸில் உணர்ச்சிவசப்பட வைக்கும் ஒரு முழுமையான ஃபீல் குட் திரைப்படம். கவின், அபர்ணா தாஸ் நடிப்பு அருமை. தொழில்நுட்ப ரீதியாக சிறந்த & முதிர்ந்த. ஒரு அருமையான அறிமுகம்” என பதிவிட்டுள்ளார்.
விமர்சனத்தை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…