குடும்பஸ்தன் படம் எப்படி இருக்கு! நம்ம அனிருத்தே விமர்சனம் கொடுத்துட்டாரு பாருங்க!
குடும்பஸ்தன் திரைப்படம் அருமையாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ஒரு படங்களுக்கு விமர்சனம் கொடுத்தார் என்றால் அந்த படம் பெரிய ஹிட் படமாக மாறும் என ரசிகர்கள் நம்புவது வழக்கமான ஒன்று. ஏனென்றால், விக்ரம், லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அவர் தான் இசையமைத்திருந்தார். இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு படம் பெரிய ஹிட் ஆகும் என்பது போல தன்னுடைய எமோஜிகளின் மூலம் விமர்சனத்தை கூறுவார்.
அப்படி அவர் இதுவரை கூறிய படங்களும் அவர் எமோஜிக்கு ஏற்றபடி பெரிய வெற்றிகளையும் சந்தித்தது. சமீபத்தில் அவருடைய இசையில் வெளிவந்த இந்தியன் 2 படத்திற்கு அவர் எந்த விமர்சனமும் கொடுக்கவில்லை. எனவே, படம் வெளியாவதற்கு முன்பே படம் ஒரு வேலை அனிருத்துக்கு பிடிக்கவில்லையா என விமர்சனங்களும் எழுந்தது. அவர் விமர்சனம் கூறவில்லை என்பதைப்போல இந்தியன் 2 படமும் பெரிய தோல்வியை சந்தித்தது.
எனவே, அனிருத் ஒரு படத்திற்கு விமர்சனம் கொடுத்தார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அந்த படத்திற்கு போகலாம் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அப்படி தான் தற்போது மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படம் பார்த்துவிட்டு அனிருத் தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “சூப்பர் ஹிட் கொடுத்த குடும்பஸ்தான் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என கூறிவிட்டு வழக்கமாக தன்னுடைய விமர்சனங்களை எமோஜி மூலம் கூறும் அனிருத் ஒரு கோப்பை ஒன்றையும் பதிவிட்டு படம் அருமையாக இருப்பதை தெரிவித்துள்ளார்.
Congratulations team #Kudumbasthan for the super hit 🏆@desingh_dp @Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @VaisaghOfficial
Very happy for the entire team 🙂
— Anirudh Ravichander (@anirudhofficial) January 24, 2025
நேற்று குடும்பஸ்தன் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. வழக்கமாக நம்மளுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது போல இருந்தாலும் கூட அதனை நகைச்சுவையாக நம்மளுக்கு எப்படி காட்டமுடியுமோ அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இந்த படத்தின் மூலம் கொடுத்துள்ளார். குட் நைட் போல இந்த படமும் மணிகண்டனும் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.