டிராகன் படம் எப்படி இருக்கு? சிம்பு கொடுத்த விமர்சனம்!
டிராகன் படம் பிளாக் பஸ்டர் ஆகும் என சிம்பு கூறியுள்ளதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

சென்னை : லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீ ரங்கநாதன் இயக்குனர் அஸ்வந்த் மாரி முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி (நாளை) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது.
காதலர் தினத்தை முன்னிட்டு படம் பிப்ரவரி 6-ஆம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் அஜித்தின் விடாமுயற்சி படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 21-ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டு நாளை வெளியாகிறது.
இந்த சூழலில், நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே, பிரதீப்ரங்கநாதன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியாகியிருந்த லவ் டுடே படத்தையும் பார்த்துவிட்டு படம் அருமையாக இருக்கிறது என கூறி முதல் ஆளாக சினிமா துறையில் இருந்து பாராட்டி இருந்தார்.
இதனையடுத்து, தற்போது டிராகன் படத்தினை முழுவதுமாக பார்த்த அவருக்கு மிகவும் பிடித்த காரணத்தால் படத்தை பற்றிய விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் டிராகன் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என கூறியுள்ளார். எனவே, சிம்புவுக்கே படம் பிடித்துவிட்டது படம் ஹிட்டு தான் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் டிராகன் இயக்குனர் அஸ்வந்த் மாரி முத்து இயக்கத்தில் தான் அடுத்ததாக சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Dragon – BLOCKBUSTER 🐉🔥@Dir_Ashwath @pradeeponelife @anupamahere @11Lohar @leon_james @nikethbommi @PradeepERagav @archanakalpathi @aishkalpathi @Ags_production
— Silambarasan TR (@SilambarasanTR_) February 20, 2025